விருச்சகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

விருச்சகம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

உங்கள் ராசிநாதன் செவ்வாய் வருட ஆரம்பத்தில் நல்ல நிலையில் உள்ளார். சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் உண்டு. இரண்டாம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக ஓரளவு நன்மைகள் உண்டு. இருப்பினும் ஏழரை சனி நடைபெறுவதால் கவனம் தேவை. ராசினாதணும் சனிபகவானும் சேர்ந்து உள்ளதால் நிதானமாக செயல்படவும். முன்கோபத்தை தவிர்க்கவும், கடுஞ்சொல் பேசுவதை தவிர்க்கவும். ஒன்பதாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு வேலை சிலருக்கு கிடைக்கும். மூன்றாம் வீட்டில் உள்ள கேது காரணமாக சிலருக்கு அலைச்சல் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக நன்மைகள் உண்டு. பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக நன்மைகள் குறைந்து செலவுகளும், விரயங்களும் உண்டாகும்.ஆறாம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக கணவன் மனைவி அன்பு குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும், வருட மத்தியில் மனமகிழ்ச்சி திரும்பும். இந்த ஆண்டு குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி எப்படி உள்ளது என்று விரிவாக பார்ப்போம்.

2018 குரு பெயர்ச்சி:

பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் குறையும். குடும்பத்தில் வரவுகளுக்கு ஏற்ற செலவுகள் அதிகரிக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்சிகள், சுப செலவுகள், ஆடம்பர செலவுகள் ஏற்படும். வேலையில் உயரதிகாரிகளை மதித்து நடக்கவும். ஆன்மீக வழிபாடு உங்களுக்கு சிறப்பு தரும். மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி  முதல் ராசிக்குள் ஜென்மகுருவாக அமர்வதால் செலவுகள் குறைந்து நன்மைகள் ஓரளவு கிடைக்கும். ஜென்மகுரு பாதிப்புகளை தரமாட்டார், அதே சமயம் பெரிய நன்மைகளையும் தர மாட்டார். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைபட்ட திருமணம், தள்ளிப்போன குழந்தை பாக்கியம் போன்ற அகம் சார்ந்த விசயங்களை குருபகவான் அன்புடன் வழங்குவார், கவலை வேண்டாம். குருபகவான் வழிபாடு அவசியம் செய்யவும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு கண்டிப்பாக நன்மைகளை தரும், கவலை வேண்டாம்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு கேது மற்றும் ராகு முறையே மூன்று மற்றும் ஒன்பதாம் வீட்டில் உள்ளன. மூன்றாம் வீட்டில் உள்ள கேது காரணமாக உங்களின் முயற்சிகள் பலிக்கும். தாயின் உடல்நிலையை கவனிக்கவும். ஒன்பதாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தொழில் மந்தமாக செல்லும். அந்நிய நபர்கள் மூலம் மகிழ்ச்சி விளையும். மேலும் வரும் 06-03-2019 முதல் கேது இரண்டாம் வீட்டில் செல்வதால் நன்மைகள் பெருகும். காத்திருந்த பணவரவுகள் வந்து சேரும். நீண்ட நாள் தடைபட்ட விஷயங்கள் கிடைக்கும். வீண் அலைச்சல் டென்ஷன் போன்றவை விலகும். ராகு எட்டாம் வீட்டில் அமர்வதால் தொழிலில் லாபம் குறையும். அந்நிய நபர்கள் மூலம் தொல்லைகள், பிரச்னைகள் கிடைக்கும். தெரியாதார்களை நம்ப வேண்டாம். இந்த ராகு-கேது பெயர்ச்சி மிதமான நன்மைகளை தரும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் நன்மைகளுடன், பொறுப்பாக செயல்பட வேண்டிய வருடமாக இருக்கும். வருட பாதிக்கு மேல் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம் :

       நவகிரக வழிபாடு (நவகிரக பூஜை) நன்மையை தரும். குலதெய்வ வழிபாடு நல்ல பலன்களை தரும். ஆரணி அருகில் உள்ள ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வர வழிபாடு நன்மைகளை அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்            :      5, 9

அதிர்ஷ்ட நிறம்           :      பச்சை, சிவப்பு

அதிர்ஷ்ட நாள்            :      புதன், செவ்வாய்கிழமை

அதிர்ஷ்ட ரத்தினம்        :      மரகதம், பவளம்