துலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் உள்ளதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டு. சூரியன், சுக்கிரன் இணைந்து ஏழாம் வீட்டில் உள்ளதால் பொதுவாக நன்மைகள் கிடைக்கும். ராசியில் உள்ள ஜென்ம குரு காரணமாக குறைவான நன்மைகள் கிடைக்கும். இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி நன்மையை தரும். நான்காம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் ஏற்படும். ராகு பத்தாம் வீட்டில் உள்ளதால் அந்நிய நபர்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். தொழில் அல்லது வேலை பொதுவாக சிறப்பாக இருக்கும். நான்கு திசைகளிலும் உங்கள் புகழ் பரவும். மூன்றாம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக சிறிது அலைச்சல் இருக்கும். வேலை கிடைக்க சிரம பட வேண்டி வரும். உற்பத்தி தொழில் மற்றும் வாகனம், ரியல்எஸ்டேட் போன்ற துறைகள் மந்தமாக இருக்கும். சனியுடன் உள்ள செவ்வாய் காரணமாக குறைவான நன்மைகள் விளையும்.

2018 குரு பெயர்ச்சி:

பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து விரயங்களையும், சுப செலவுகளையும் தந்த  குருபகவான் இந்த 2018 ம் வருடம் முழுவதும் ஜென்ம குருவாக ராசியில் உள்ளதால் சென்ற வருடம் ஏற்பட்ட செலவுகள், விரயங்கள் குறையும். இருப்பினும் ஜென்ம குருவால் நன்மைகள் சற்று குறைவாக கிடைக்கும். எந்த செயலையும் பல முறை யோசித்து செய்யவும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஜென்மகுரு பெரிய அளவு தீமை செய்யமாட்டார், அதே போல நன்மைகளையும் செய்ய மாட்டார். மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி முதல் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தடைபட்ட நன்மைகள் யாவும் கிடைக்கும். செலவுகள் குறைந்து வரவுகள் ஏற்படும். உங்கள் தொழில் / வேலை சிறப்பாக இருக்கும். தள்ளிப்போன திருமணம், தடைபட்ட குழந்தை பாக்கியம் போன்ற பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த யாவும் கிடைக்கும்.. வேலைக்கு செல்பவர்கள் நன்மை பெறுவார்கள். இந்த குரு பெயர்ச்சி சென்ற குருபெயர்ச்சியை விட நன்மைகள் கொண்டதாக அமையும்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு கேது மற்றும் ராகு முறையே நான்கு மற்றும் பத்தாம் வீட்டில் உள்ளன. நான்காம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் கிடைக்கும். பத்தாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தொழில் சிறப்படையும். வேலையில் உள்ளவர்கள் பொதுவாக நன்மைகளை பெறுவார்கள். உங்களின் புகழ், கெளரவம் சிறப்படையும். மேலும் வரும் 06-03-2019 முதல் கேது மூன்றாம் வீட்டில் செல்வதால் நன்மைகள் குறையும். வீடு, மனை விற்கும் நிலை ஏற்படும். ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் குறைவான நன்மைகள் உண்டு, வேலையில் உள்ளவர்கள் இடமாற்றம் பெற வாய்ப்புகள் உள்ளது.  பொதுவாக ராகு கேது பெயர்ச்சிகள் சுமாரான நன்மைகளை தரும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் நன்மைகள் கொண்ட சாதரணமான வருடமாக இருக்கும். குருபெயர்ச்சிக்கு பிறகு மேலும் நன்மைகள் கிடைக்கும்.

பரிகாரம் :

       மதுரை மீனாட்சி அம்மனை வணங்க நன்மைகள் ஏற்படும். கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட நன்மைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்            :      2, 1

அதிர்ஷ்ட நிறம்           :      வெண்மை

அதிர்ஷ்ட நாள்            :      திங்கள், ஞாயிறு

அதிர்ஷ்ட இரத்னம் :      முத்து, மரகதம்