சிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

சிம்மம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

உங்கள் ராசிநாதன் சூரியன் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து உள்ளதால் நன்மைகள் / மனமகிழ்ச்சி கிடைக்கும். எட்டாம் வீட்டில் உள்ள புதன் காரணமாக சில பிரச்னைகள் வருட ஆரம்பத்தில் தோன்றி மறையும். குழந்தைகளால் செலவுகள், விரயங்கள் உண்டாகலாம். உங்கள் யோகாதிபதி செவ்வாய் ஐந்தாம் வீட்டில் நல்ல நிலையில் உள்ளதால் தனவரவு சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் மனமகிழ்ச்சி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் உள்ளதால் தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி அமையும். மூன்றாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். வெளியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு நிலையான வேலைவாய்ப்புகள் அமையாது. சிலருக்கு வெளியூர் சென்று வலை பார்க்க நேரிடும். பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக செலவுகள் அதிகரிக்கும். ஆறாம் வீட்டில் உள்ள கேது காரணமாக உடல் ஆரோக்கியம் குறையும். மருத்துவ ஆலோசனை தேவைப்படும். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். இந்த வருடம் நிகழும் குரு, ராகு, கேது பெயர்ச்சி எவ்வாறு உள்ளது என்று இனி பார்ப்போம்

குரு பெயர்ச்சி:

மூன்றாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் சற்று குறையும். செலவுகள், விரயங்கள் சிலருக்கு ஏற்படும். சிலருக்கு திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு சில முயற்சிகளுக்கு பிறகு வேலை அமையும். கணவன் – மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை போன்றவை சுமாராக இருக்கும். சகோதர வழியில் நன்மைகள் குறையும். மற்றவரிடம் பேசும் பொது கவனமாக பேசவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி முதல் நான்காம் வீடு சென்று அமர்வதால் எதிர்பார்த்த தனவரவு, தடைபட்ட நன்மைகள் வந்து சேரும். வீடு, மனை, வாகனம் வாங்க சிறப்பான காலமாக அமையும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நன்மைகளை கொண்டதாக இருக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு ராகு மற்றும் கேது முறையே பன்னிரண்டு மற்றும் ஆறாம் வீட்டில் உள்ளன. விரிய ராகுவால் வரவை தாண்டிய செலவுகளும்,  அந்நிய நபர்கள் மூலம் நஷ்டங்களும் விளையும். தெரியாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆறாம் வீட்டில் உள்ள கேது காரணமாக சிறிது பொருளாதார நன்மைகள் கிடைக்கும். உணவு பழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. மேலும் வரும் 06-03-2019 முதல் கேது ஐந்தாம் வீட்டில் அமர்வதால் உடல்நலன் சீராகும், சிலருக்கு கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும், ராகு பதினோராம் வீட்டில் அமர்வதால் செலவுகள் குறைந்து சேமிப்புகள் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சி நன்மைகளை அளிக்கும் வகையில் அமையும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் நன்மைகள் கொண்டதாக அமையும் பிற்பகுதி மிகவும் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் :

       திருப்பதி ஏழுமலையானை வணங்க நன்மைகள் கிடைக்கும், காலஹஸ்தி சென்று வணங்க நன்மைகள் பிறக்கும். பைரவர் வழிபாடு சிறப்பை தரும்.

அதிர்ஷ்ட எண்            :      1, 3, 5

அதிர்ஷ்ட நிறம்           :      வெண்மை, பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்            :      புதன், வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட இரத்னம் :      மரகதம், மாணிக்கம்