ரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சிறப்பாக உள்ளதால் நன்மைகள் ஏற்படும். வீட்டில் பொருள் சேர்க்கை, ஆபரண சேர்க்கை ஏற்படும். சந்திரன் மற்றும் புதன் போன்ற கிரகங்கள் பதினோராம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும். திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். சனிபகவான் எட்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் குறைந்து பிரச்சனைகள் தோன்றும். அனைத்து காரியங்களும் மந்தமாகவே நடைபெறும். யாருக்கும் ஜாமீன் தர வேண்டாம். செவ்வாயுடன் சேர்ந்து உள்ள சனி பகவான் காரணமாக இடம், மனை போன்ற விசயங்களில் பிரச்சனைகள் தோன்றலாம். ஆறாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். குழந்தை பிறப்பு, திருமணம் போன்ற விஷயங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். ஒன்பதாம் வீட்டில் உள்ள கேது பகவான் மூலம் நன்மைகள் ஏற்படும். மூன்றாம் வீட்டில் உள்ள ராகு மூலம் அந்நிய நபர்களால் நன்மைகள் உண்டு. சிலருக்கு வெளியூர் சென்று வேலை பார்க்க நேரும். சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று வசிக்க நேரிடும்.

2018 குரு பெயர்ச்சி:

ஆறாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக பொருளாதார நன்மைகள் ஏற்படும். சந்தோசம், மனமகிழ்ச்சி போன்றவை குறைவாக அனுபவிக்க வேண்டிய காலம். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற காலதாமதம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு ஓரளவு சிறப்பான வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி முதல் ஏழாம் வீடு சென்று அமர்வதால் பெண்களுக்கு திருமண பேச்சுக்கள் மகிழ்ச்சியை தரும். தடைபட்ட திருமணம், தள்ளிப்போன குழந்தைபாக்கியம் போன்ற பிரச்சனைகள் விலகி நன்மை உண்டாகும். சென்ற குருபெயர்ச்சியை விட நன்மைகள் / மனமகிழ்ச்சி அதிகம் கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு ராகு மற்றும் கேது முறையே மூன்று மற்றும் ஒன்பதாம் வீட்டில் உள்ளன. ராகு மற்றும் கேது காரணமாக தொழில் சுமாரான நிலையில் இருக்கும். வேலை காரணமாக சிலருக்கு அலைச்சல் இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் உண்டு. மேலும் ராகு மற்றும் கேது வரும் 06-03-2019  முதல் ராகு இரண்டாம் வீட்டிலும் கேது எட்டாம் வீட்டிலும் அமர்வதால் நன்மை தீமை கலந்த பலன்கள் கிடைக்கும். கேது எட்டாம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊரில் உங்கள் கெளரவம், மதிப்பு குறையும். ராகு இரண்டாம் வீட்டில் உள்ளதால் தனவரவு ஓரளவு சிறப்படையும். வெளிநாடு அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை அமையும். அந்நிய நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் மிதமான நன்மைகள் கொண்ட வருடமாக இருக்கும். பிற்பகுதி மிகவும் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:

தினமும் காலை வேளையில் விநாயகபெருமானை வணங்க நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்            –      3, 5,

அதிர்ஷ்ட நிறம்           –      மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட நாள்            –      புதன், வியாழன்

அதிர்ஷ்ட இரத்னம் –      மரகதம், மஞ்சள் புஸ்பராகம்