மிதுனம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:
பொதுவானவை:
வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பத்தாம் வீட்டில் வலுவாக உள்ளதால் வருடத்தின் தொடக்கம் நன்மையாக இருக்கும். சூரியன் பதினோராம் வீட்டில் உள்ளதால் திருப்தியான வாழ்க்கை சூழல் ஏற்படும். செவ்வாய் ஏழாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் பெருகும். சகோதர வழியில் நன்மைகள் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சனிபகவான் உள்ளதால் பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும். தடைபட்ட திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். ஐந்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் நன்மைகளை தருவார். வேலையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதாக நடைபெறும். இந்த வருடம் ஏற்படும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பொருளாதார நன்மைகளை தரும்.
2018 குரு பெயர்ச்சி:
ஐந்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் நன்மைகளை தருவார். வேலையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதாக நடைபெறும். வெளியில் நல்ல பெயர் மரியாதை கிடைக்கும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி பெருகும். மேலும் குரு பகவான் இந்த வருடம் 11-10-2018 ம் தேதி முதல் ஆறாம் வீடு சென்று அமர்வதால் நன்மைகள் தொடரும். வேலையில் உள்ளவர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகளை வருட இறுதியில் எதிர்பார்க்கலாம். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த குரு பெயர்ச்சி சென்ற குருபெயர்ச்சியை விட நன்மைகள் கொண்டதாக இருக்கும்.
ராகு-கேது பெயர்ச்சி:
உங்கள் ராசிக்கு ராகு மற்றும் கேது முறையே இரண்டு மற்றும் எட்டாம் வீட்டில் உள்ளன. இரண்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தேவையான தனவரவு உண்டாகும். எட்டாம் வீட்டில் உள்ள கேது காரணமாக சில பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சிலருக்கு அடிக்கடி தலைசுற்றல், குழப்பம் போன்றவை ஏற்படும். மேலும் ராகு மற்றும் கேது வரும் 06-03-2019 முதல் கேது ஏழாம் வீட்டிலும் ராகு ராசியிலும் அமர்வதால் நன்மைகள் கிடைக்கும். கேது ஏழாம் வீட்டில் சென்று அமர்வதால் இதுநாள்வரை இருந்த குழப்பங்கள் நீங்கும். ஒரு வித தெளிவு மனப்பான்மை பிறக்கும். ராசியில் அமரும் ராகு காரணமாக நன்மைகள் உண்டு. அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். அடுத்தவரிடம் பேசும் பொது கவனமாக பேசவும், உங்கள் நாவே உங்களுக்கு எதிரி என்பதை மறக்காதீர்.
பொதுவாக இந்த தமிழ் வருடம் வரும் பெயர்ச்சிகள் உங்களுக்கு நன்மைகளை தரும் வகையில் அமையும். விளம்பி வருடம் பொதுவாக நன்மையான வருடமாக அமையும்
பரிகாரம் :
வெள்ளிக்கிழமை தோறும் “மஹாலெஷ்மியை” வணங்கி வருதல் நலம். சனிக்கிழமை “ஆஞ்சநேரையும்” வழிபடுதல் நற்பலன் அளிக்கும்.
அதிர்ஷ்ட எண் – 3, 5, 8
அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், பச்சை, நீலம்
அதிர்ஷ்ட நாள் – புதன், வியாழன், சனி
அதிர்ஷ்ட ரத்னம் – மரகதம், புஸ்பராகம், நீலக்கல்