மேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மேஷம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக உள்ளதால் நினைத்த காரியங்கள் யாவும் சிறப்பாக நடக்கும். ஒன்பதாம் வீட்டில் உள்ள சனிபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். விவசாயிகளுக்கு நன்மைகள் பிறக்கும். வேலைகாரர்களால் நன்மைகள் உண்டாகும். ராசியில் உள்ள சுக்கிரன் காரணமாக கணவன் மனைவி அன்பு குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருட தொடக்கத்தில் புதன் சுமாராக உள்ளதால் சொந்த தொழில் மந்தமாக செல்லும். கலைத்துறையினர் மே மாதத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். கேது பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகளை தரும். நான்காம் வீட்டில் உள்ள ராகு காரணமாக உற்பத்தி தொழில் சிறப்படையும். பண விசயங்களில் கவனமாக இருக்கவும். சிலருக்கு பணி மாற்றம் , இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வருடத்தின் தொடக்கம் சுமாராக இருந்தாலும் பிற்பகுதி சிறப்பாக அமையும்.. வேலையில் உள்ளவர்கள் சிறப்பு பெறுவார்கள். மனமகிழ்ச்சி, குழந்தை பிறப்பு போன்றவை இந்த விளம்பி வருடத்தில் சிறப்பாக இருக்கும். குரு, ராகு-கேது பெயர்ச்சிகள் சில மாற்றங்களை உங்களுக்கு தரும்.

குரு பெயர்ச்சி:

ஏழாம் வீட்டில் உள்ள குரு பகவான் எதிர்பார்த்த நன்மைகளை வழங்குவார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளியுலகில் உங்கள் மதிப்பு, கெளரவம் கூடும். சொந்த தொழில் சிறப்பான நிலையை அடையும். தாய் தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குரு பகவான் இந்த வருடம்  11-10-2018  ம் தேதி முதல் எட்டாம் வீடு சென்று அமர்வதால் மனமகிழ்ச்சி குறைந்து வீண் அலைச்சலும், பதட்டமும் அதிகரிக்கும். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் அமைய போராட வேண்டிவரும். பலருக்கு திருமண தடை ஏற்படும். நினைத்ததை விட குறைவான தகுதியுடைய வரன்கள் வந்து சேரும். வெளியுலகில் உங்கள் மதிப்பு, கெளரவம் குறையும். வெளியில் யாரிடமும் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். குழந்தைகள் கவனமாக படிக்கவும். காதல் விஷயங்கள் தோல்வியில் முடியும். கடந்த குரு பெயர்ச்சியை காட்டிலும் இந்த குரு பெயர்ச்சி சிறப்பானதாக இருக்காது, குறைவான நன்மைகளே…

.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு ராகு மற்றும் கேது முறையே நான்கு மற்றும் பத்தாம் வீட்டில் உள்ளன. ராகு மற்றும் கேது காரணமாக பொருளாதார முன்னேற்றமும், சிறப்பான தொழிலும் உங்களுக்கு கிடைக்கும். விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு காத்திருந்த வெளிநாடு வேலை தடையின்றி அமையும். மேலும் ராகு மற்றும் கேது வரும் 06-03-2019  முதல் ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் அமர்வதால் சுமாரான நன்மைகள் கிடைக்கும். பிரச்சனைகள் இருக்காது, முன்னேற்றமும் பெரிதளவு இருக்காது. இன்ப சுற்றுலா, ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். விரும்பிய அல்லது காத்திருந்த உயர்கல்வி படிக்க வாய்ப்புகள் ஏற்படும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வருட இறுதி சுமாராக செல்லும். பொதுவாக இந்த வருடமும் உங்களுக்கு நல்லதொரு ஆண்டு தான்…

பரிகாரம் :

ஞாயிற்றுகிழமைகளில் சிவன் கோவிலில் உள்ள அம்பாளையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கவும். சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று வழிபட நன்மைகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண்            :  3, 8, 9

அதிர்ஷ்ட நிறம்           : மஞ்சள். கருப்பு, சிகப்பு.

அதிர்ஷ்ட நாள்            : செவ்வாய், வியாழன், சனி

அதிர்ஷ்ட இரத்னம் : பவளம், கருநீலக்கல்