மீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மீனம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

உங்கள் ராசிநாதன் குரு எட்டாம் வீட்டில் மறைந்து உள்ளதன் காரணமாக பொதுவாக நன்மைகள் குறைந்து எதிர்மறை பிரச்சனைகள் தோன்றும். கணவன் மாணவி ஒற்றுமை, அன்பு போன்றவை பாதிக்கும். குழந்தைபாக்கியம், திருமணம், நிச்சயம் போன்ற பல சுப நிகழ்ச்சிகள் தடைபடும். சூரியன் மற்றும் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் உள்ளதால் நினைத்த இடத்தில் இருந்து தனவரவு கிடைக்கும். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் உள்ளதால் பொருளாதர முன்னேற்றம் ஏற்படும். பத்தாம் வீட்டில் உள்ள சனி காரணமாக நன்மைகள் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு வேலை சிலருக்கு அமையும். இந்த வருடம் நிகழும் ராகு கேது பெயர்ச்சி நன்மையாகவும் மற்றும் குரு பெயர்ச்சி சிறப்பாகவும் உங்களுக்கு அமையும்.

குரு பெயர்ச்சி:

எட்டாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக பொதுவாக நன்மைகள் குறைந்து எதிர்மறை பிரச்சனைகள் தோன்றும். கணவன் மாணவி ஒற்றுமை, அன்பு போன்றவை பாதிக்கும். குழந்தைபக்கியம், திருமணம், நிச்சயம் போன்ற பல சுப நிகழ்ச்சிகள் நடக்க போராட வேண்டிவரும். குரு பகவான் இந்த வருடம்  11-10-2018  ம் தேதி முதல் ஒன்பதாம் வீடு சென்று அமர்வதால்  குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடைகள் விலகும். சமுதாயத்தில் அந்தஸ்து, மரியாதை அதிகரிக்கும். உங்களின் தொழில் சிறப்படையும். இறையருள் கிடைக்கும் காலமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், சென்ற குரு பெயர்ச்சியில் இருந்து மீண்டு பல நன்மைகள் கிடைக்கும் பெயர்ச்சியாக இருக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு கேது பதினோராம் வீட்டில் உள்ளது. ராகு ஐந்தாம் வீட்டில் உள்ளது. கேது காரணமாக சேமிப்புகள் இருக்கும். ராகு காரணமாக அந்நிய நபர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மேலும் ராகு-கேது 06-03-2019 அன்று முதல் பத்து மற்றும் நான்காம் வீட்டில் பெயர்ச்சி ஆவதால் நன்மைகள் ஏற்படும், திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும். செலவுகள், விரயங்கள் குறையும். உற்பத்தி சார்ந்த தொழில் செய்பவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பொதுவாக நன்மைகள் ஏற்படும். 

பொதுவாக இந்த வருட பிற்பகுதி எதிர்பார்த்த அளவு நன்மையாக அமையும். நினைத்த காரியங்கள் கைகூடும்.

பரிகாரம் :

       வியாழகிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் உண்டாகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும்.

அதிர்ஷ்ட எண்     :      1, 3

அதிர்ஷ்ட நிறம்    :      வெண்மை, மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்     :      ஞாயிறு, வியாழன்

அதிர்ஷ்ட ரத்தினம் :      மாணிக்கம், புஷ்பராகம்