Generic For Avalide 300mg 25mg Harder Erections Without Pills Lexapro 10 Mg Purchase Lithium Metal Buy Amaryl Online

மகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மகரம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

உங்கள் ராசிநாதன் சனி பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் குறையும். விரைய செலவுகளும், நஷ்டங்களும் ஏற்படும். ஏழரை சனியின் முதல் பகுதி என்பதால் கவனம் தேவை. சனிபகவானுடன் சேர்ந்து உள்ள செவ்வாய் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படலாம். யாரிடமும் வாக்குவாதம், முன்கோபம் இல்லாமல் நடக்கவும். பொதுவாக விட்டுகொடுத்து செல்வது நல்லது.. சூரியன் மற்றும் சுக்கிரன் போன்றவை நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் நன்மையாக அமையும். நான்காம் வீட்டில் உள்ள சுக்கிரன் காரணமாக கணவன் மனைவி ஒற்றுமை அன்பு போன்றவை சுமாராக இருக்கும்.

பத்தாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். சொந்த தொழில் சிறப்பாக இருக்கும். உங்களின் புகழ், கெளரவம் சிறப்படையும். ஏழாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக நன்மைகள் விளையும். அந்நிய நபர்களால் நன்மைகள் உண்டு. ராசிக்குள் உள்ள கேது காரணமாக ஓரளவு நன்மைகள் கிடைக்கும். ஏதோ ஒரு குழப்பம் உங்களை தொற்றிகொள்ளும். இந்த வருடம் நிகழும் கிரக பெயர்ச்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

2018 குரு பெயர்ச்சி:

பத்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். தொழில் நல்ல முன்னேற்ற நிலையில் இருக்கும். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சுபகாரியங்கள் ஏற்படும். திருமண தடைகள் விலகி சுப காரியங்கள் நடக்கும். வெளியில் உங்கள் மதிப்பு, கெளரவம் சிறப்படையும். மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி முதல் பதினோராம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் தொடரும். வேலையில் உள்ளவர்கள் நன்மை பெறுவார்கள். புகழ், கெளரவம் போன்றவை சிறப்படையும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். திருப்தியான சூழல் ஏற்படும். உங்களின் சேமிப்புகள் பெருகும். பொதுவாக சென்ற குரு பெயர்ச்சியை போலவே அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம். சனிபகவான் தரும் பிரச்சனைகளில் இருந்து குருபகவான் உங்களை காப்பார்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு கேது மற்றும் ராகு முறையே ஒன்று மற்றும் ஏழாம் வீட்டில் உள்ளன. ராசிக்குள் உள்ள கேது காரணமாக தனவரவு சிறப்பாக இருக்கும். ஏழாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் மனமகிழ்ச்சி தோன்றும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் வரன்கள் வந்து சேரும். மேலும் வரும் 06-03-2019 முதல் கேது பன்னிரெண்டாம் வீட்டில் செல்வதால் வரவுகள் குறைந்து செலவுகள் ஏற்படும். தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். ராகு ஆறாம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் உள்ளது. ராகு கேது பெயர்ச்சிகள் உங்களுக்கு நன்மை தீமைகளை கலந்தே தரும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் மிதமான வருடமாக இருக்கும். வருட பிற்பகுதி இன்னும் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம் :

       விநாயக பெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும். சனி கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்தீபம் தீபம் ஏற்றி வர துன்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட எண்     :      5, 6

அதிர்ஷ்ட நிறம்    :      பச்சை, வெண்மை

அதிர்ஷ்ட நாள்     :      புதன், வெள்ளி

அதிர்ஷ்ட ரத்தினம் :      மரகதப்பச்சை, வைரம்