கும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்பம் விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

உங்கள் ராசிநாதன் சனிபகவான் பதினோராம் வீட்டில் உள்ளதால் பொதுவாக நன்மைகள் கிடைக்கும், தொழில் சிறப்பான நிலையில் இருக்கும். நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். தனவரவு ஓரளவு சிறப்படையும். குருபகவான் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பலருக்கு திருமண தடைகள் விலகி திருமணம் சிறப்பாக நடைபெறும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வாய்ப்புகள், கல்லூரி சேர இடம் போன்றவை கிடைக்கும்.

மூன்றாம் வீட்டில் உள்ள சுக்கிரன் மற்றும் சூரியன் காரணமாக சிறு அலைச்சல் இருக்கும். அரசாங்க காரியங்கள் மந்தமாக இருக்கும். இரண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் சந்திரன் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். பன்னிரெண்டாம் உள்ள கேது காரணமாக அவ்வபோது தலைவலி ஏற்படும். வரவை தாண்டிய செலவுகள் ஏற்படும். ஆறாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக சிறப்பான வேலை அமையும். அன்னிய நபர்களால் நன்மைகள் ஏற்படும். வெளிநாடு செல்ல சிலருக்கு வாய்ப்புகள் ஏற்படும். இந்த வருடம் நடக்கும் குரு பெயர்ச்சி – ராகு கேது பெயர்ச்சி நன்மைகளை தரும்.

குரு பெயர்ச்சி:

ஒன்பதாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக குடும்ப ஒற்றுமை, மனமகிழ்ச்சி போன்றவை சிறப்படையும். சமுதாயத்தில் சிறப்பான மரியாதை, அந்தஸ்து கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். திருமண பேச்சுக்கள் மகிழ்ச்சியை தரும். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள். குரு பகவான் இந்த வருடம்  11-10-2018  ம் தேதி முதல் பத்தாம் வீடு சென்று அமர்வதால் சமுதாயத்தில் நல்ல மரியாதையை பெறுவீர்கள். சிறப்பான பதவிகள் உங்களை தேடி வரும். அரசியல்வாதிகள் நல்ல பதவி பெரும் காலம்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் காலம். பொதுவாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு கேது மற்றும் ராகு முறையே பன்னிரெண்டாம் மற்றும் ஆறாம் வீட்டில் உள்ளன. ஆறாம் வீட்டில் உள்ள ராகு பகவான் காரணமாக வேலை, வருமானம், தனவரவு போன்ற நன்மைகள் கிடைத்தாலும் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கேதுவால் விரயங்களும், செலவுகளும் அதிகரிக்கும். சுப செலவுகள், ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். மேலும் வரும் 06-03-2019 முதல் கேது பதினோராம் வீட்டில் செல்வதால் நன்மைகள் திரும்பும். வீண் குழப்பங்கள், செலவுகள், விரயங்கள் மறையும். ராகு ஐந்தாம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் உண்டு. எடுத்த காரியங்களில் மனமகிழ்ச்சி கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சிகள் உங்களுக்கு நன்மைகளை தரும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் நல்ல வருடமாக அமையும். பிற்பகுதி மிக சிறப்பாக இருக்கும்

பரிகாரம் :

       திருசெந்தூர் முருக பெருமானை வணங்க நன்மைகள் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடும் நன்மைகளை தரும்.

அதிர்ஷ்ட எண்     :      2, 3

அதிர்ஷ்ட நிறம்    :      வெண்மை, மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்     :      திங்கள், வியாழன்

அதிர்ஷ்ட ரத்தினம் :      முத்து, மஞ்சள் புஷ்பராகம்