கன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள்

கன்னி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் ஏழாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் ஏற்படும், சொந்த தொழில் சிறப்பாக இருக்கும். மேலும் சூரியன், சுக்கிரன் போன்றவை எட்டாம் வீட்டில் உள்ளதால் வருடத்தின் தொடக்கம் சற்று சுமாராகவும், வைகாசி மாதத்திற்கு பிறகு நன்மைகளை எதிர்பார்க்கலாம். சனிபகவான் நான்காம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகள் சிறப்பாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் தடைபடும்.

செவ்வாய் சனிபகவானுடன் சேர்ந்து நான்காம் வீட்டில் உள்ளதால் சகோதர சகோதரிகள் வழியில் நன்மைகள் ஏற்படும். இடம், மனை சம்மந்தப்பட்ட விஷயங்கள் நன்மையை தரும். இரண்டாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் உண்டு, எதிர்பார்த்த தனவரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி ஓரளவு சிறப்பாக இருக்கும். பதினோராம் வீட்டில் உள்ள ராகு காரணமாக செலவுகள் குறைந்து சேமிப்புகள் உண்டு. கேது ஐந்தாம் வீட்டில் உள்ளதால் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். உறவினர்கள், பயணங்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். பள்ளிப்படிப்பை சிறப்பாக முடித்து வெற்றி பெறுவீர்கள்.

2018 குரு பெயர்ச்சி:

இரண்டாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் அடங்கும். உங்களின் தனவரவு சிறப்படையும். தொழிலில் லாபம் ஏற்படும். உங்களின் கெளரவம், அந்தஸ்து, மரியாதை போன்றவை சிறப்படையும். மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி முதல் மூன்றாம் வீடு சென்று அமர்வதால் நன்மைகள் சற்று குறையும். உங்களின் முயற்சிக்கு பிறகே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தகவல்தொடர்பு துறையில் உள்ளவர்கள் மகிழ்ச்சி பெறுவார்கள். திருமணம், குழந்தை பிறப்பு போன்ற அகம் சார்ந்த விசயங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கும். நீண்ட நாள் எடுத்துவந்த முயற்சிகள் வெற்றி அடையும் காலமாக இருக்கும். கவலை வேண்டாம், சித்தர்கள் வழிபாடு மூலம் நன்மைகளை அடையலாம்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு ராகு மற்றும் கேது முறையே பதினொன்று மற்றும் ஐந்தாம் வீட்டில் உள்ளன. ஐந்தாம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதினோராம் வீட்டில் உள்ள ராகு காரணமாக செலவுகள் மறைந்து நிம்மதி ஏற்படும். அந்நிய நபர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வெளிநாடு இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் மூலம் நன்மைகள் விளையும். மேலும் ராகு மற்றும் கேது  வரும் 06-03-2019 முதல் கேது நான்காம் வீட்டில் சென்று அமர்வதால் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். ராகு பத்தாம் வீடான தொழில் வீட்டில் செல்வதால் தொழிலில் லாபம் கிடைக்கும். வேலையில் பதவு உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். பொதுவாக ராகு கேது பெயர்ச்சியால் நன்மைகள் கிடைக்கும்.

பொதுவாக இந்த விளம்பி வருடம் நன்மைகள் கொண்டதாகவும், பிற்பகுதி மிகவும் சிறப்பாகவும் இருக்கும்..

பரிகாரம் :

       வெள்ளிக்கிழமை மஹாலெஷ்மியை வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும். சிவபெருமானை வணங்க மேலும் நன்மைகள் கிட்டும். குரு வழிபாடு நன்மைகளை தரும்.

அதிர்ஷ்ட எண்            :      2, 6, 8

அதிர்ஷ்ட நிறம்           :      வெண்மை, கருப்பு

அதிர்ஷ்ட நாள்            :      திங்கள், வியாழன், சனி

அதிர்ஷ்ட இரத்னம் :      மரகதம், கருநீலக்கல்