கடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கடகம் விளம்பி  தமிழ் புத்தாண்டு பலன்கள்

பொதுவானவை:

வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். மாசி மாதத்தை தவிர மற்ற மாதங்களில் பொதுவாக நன்மைகள் ஏற்படும். மேலும் புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் சிறப்பாக உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். ஏழாம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் கிடைக்கும்.

ஆறாம் வீட்டில் உள்ள சனி காரணமாக வேலையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். உணவு பழக்கத்தில் கவனம் தேவை. செவ்வாய் பகவானும் சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் உள்ளதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். அடுத்தவரிடம் முன்கோபத்தை கட்டுவதை குறைத்தால் எல்லாம் நலமே. சகோதர வழியில் நன்மைகள் உண்டு. நான்காம் வீட்டில் உள்ள குரு பகவான் காரணமாக தேவையான நன்மைகள் ஏற்படும். உற்பத்தி தொழில் சிறப்படையும். கல்வியில் மேன்மை உண்டாகும். இந்த வருடம் நிகழும் ராகு-கேது பெயர்ச்சி நன்மைகள் அற்றதாகவும், குரு பெயர்ச்சி  மிகவும் நன்மையாகவும் அமையும்.

2018 குரு பெயர்ச்சி:

நான்காம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். வெளியில் உங்கள் புகழ், கெளரவம் சிறப்படையும். வேலையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். உற்பத்தி தொழில் செய்பவர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள். மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி முதல் ஐந்தாம் வீடு சென்று அமர்வதால் நன்மைகள் பெருகும். தடைபட்ட திருமணம், தள்ளிப்போன குழந்தைபாக்கியம் போன்ற பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் வருட இறுதியில் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார்கள். மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். சென்ற குருபெயர்ச்சியை விட இந்த குரு பெயர்ச்சி நன்மைகளை தரும்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு ராகு மற்றும் கேது முறையே ஒன்று மற்றும் ஏழாம் வீட்டில் உள்ளன. ராசிக்குள் வீட்டில் உள்ள ராகு காரணமாக ஓரளவு தனவரவு கிடைக்கும். அந்நிய நபர்களால் நன்மைகள் உண்டு. ஏழாம்வீட்டில் உள்ள கேது காரணமாக பிரச்னைகள் இல்லாமல் வாழ்க்கை நகரும். மேலும் வரும் 06-03-2019 முதல் ராகு பன்னிரெண்டாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டில் அமர்வதால் பிரச்சனைகள் ஏற்படும். வரவை தாண்டிய செலவுகள் ஏற்படும். வீட்டு சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். வேலை இல்லாதவர்களுக்கு சிறிய அளவிலான வேலைவாய்ப்புகள் அமையும். பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்கள் மூலம் விரயங்களும், செலவுகளும் கிடைக்கும், தெரியாதவர்கள் யாருக்கும் உதவ வேண்டாம். வெளிநாடு தொடர்பு, வெளிநாடு செல்லுதல் போன்றவற்றில் தடைகள் ஏற்படும். சிலருக்கு சொந்த ஊர் திருப்புவதில் பிரச்சனை ஏற்படும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் வரும் நன்மைகள் கொண்ட வருடமாக அமையும். வருட இறுதி சற்று கடினமாக இருக்கும்.

பரிகாரம் :

       கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட நன்மைகள் கிடைக்கும். நவகிரக பூஜையில் கலந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட எண்            :      3, 9

அதிர்ஷ்ட நிறம்           :      மஞ்சள், சிகப்பு

அதிர்ஷ்ட நாள்            :      செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட இரத்னம் :      மஞ்சள் புஷ்பராகம், பவளம்.