தனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள்

தனுசு விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்:

பொதுவானவை:

வருட தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் பதினோராம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் பெருகும். சுக்கிரன் மற்றும் சூரியன் போன்ற கிரகங்கள் ஐந்தாம் வீட்டில் உள்ளதால் மனமகிழ்ச்சி கிடைக்கும். கணவன் மனைவி அன்பு குடும்ப ஒற்றுமை போன்றவை சிறப்படையும். குலைந்தி இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராசிக்குள் உள்ள செவ்வாய் காரணமாக நன்மைகள் கிடைக்கும். ராசிக்குள் உள்ள சனிபகவான் காரணமாக நன்மைகள் குறையும்.

ஏழரை சனியின் நடு பகுதி (ஜென்ம சனி) என்பதால் கவனமாக செயல்படவும். செவ்வாயுடன் சேர்ந்து சனிபகவான் உள்ளதால் யாரிடமும் எந்த விசயங்களையும் வெளிப்படையாக பேச வேண்டாம். உங்கள் நாவே உங்களுக்கு எதிரியாக செயல்பட கூடும் என்பதால் கவனம் தேவை. இரண்டாம் வீட்டில் உள்ள கேது காரணமாக நன்மைகள் உண்டு. எட்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக தொழில் மந்த நிலையில் இருக்கும். அந்நிய நபர்களால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும். ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மையாகவும், குரு பெயர்ச்சி சுமாரகவும் இருக்கும். ஏழரை சனி என்பதால் கவனம் தேவை.

2018 குரு பெயர்ச்சி:

பதினோராம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். தொழில் சிறப்படையும் நிலை உண்டாகும். திருப்தியான வாழ்க்கை சூழல் உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பிரச்சனைகளை சமாளிக்க குரு தைரியம் தருவார். வேலை இல்லாமல் இருந்தவர்கள் நல்ல வேலையில் சேர்வார்கள். சமுதாயத்தில் கெளரவம் அந்தஸ்து உயரும் மேலும் குரு பகவான் இந்த வருடம்  11-10-2018 ம் தேதி முதல் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வதால் நன்மைகள் குறைந்து செலவுகள் ஏற்படும். சுப செலவுகள், ஆடம்பர செலவுகள் காரணமாக நிம்மதி குறையும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் தள்ளிபோகும். வெளியில் உங்கள் கெளரவம் குறையும். வாக்கை காப்பாற்ற போராட வேண்டிவரும்.

ராகு-கேது பெயர்ச்சி:

உங்கள் ராசிக்கு கேது மற்றும் ராகு முறையே இரண்டு மற்றும் எட்டாம் வீட்டில் உள்ளன. இரண்டாம் வீட்டில் உள்ள கேது காரணமாக வரவுகள் வந்தாலும் எட்டாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக செலவுகளாக மாறும். அந்நிய நபர்கள் மூலம் பிரச்சனைகளும், விரயங்களும் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பிரச்சனைகள் தோன்றி மறையும். மேலும் வரும் 06-03-2019 முதல் கேது ராசியிலும் ராகு ஏழாம் வீட்டிலும் அமர்வதால் நன்மைகள் ஏற்படும். செலவுகள் விரயங்கள் குறையும். உங்களை சுற்றி இருந்த பிரச்சனைகள் அகலும். வெளிநாடு வேலை முயற்சித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

பொதுவாக இந்த விளம்பி தமிழ் வருடம் பிற்பகுதி முதல் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இருப்பினும் போராட்டங்கள் மற்றும் முயற்சிகள் தொடரும்

பரிகாரம் :

       துர்க்கை அம்மனை வணங்க நன்மைகள் ஏற்படும். சனி கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்தீபம் தீபம் ஏற்றி வர துன்பங்கள் தீரும். ராகு கால பூஜை வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்     :      8, 6

அதிர்ஷ்ட நிறம்    :      கருமை, வெண்மை

அதிர்ஷ்ட நாள்     :      சனி, வெள்ளி

அதிர்ஷ்ட ரத்தினம் :      நீலக்கல், வைரம்